முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 237 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா களமிறங்கினார்கள். இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரின் 3-வது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஃபின்ச் வெளியேறினார். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி 237 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் குவாஜா அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார்.

100-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச், ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறி உள்ளார்.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி தற்போது 37.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. களத்தில் தோனியும், ஜாதவும் விளையாடி வருகின்றனர்.

Exit mobile version