திருத்தணி பழைய தாலுகா அலுவலகத்தில் தீவிபத்து

திருத்தணி பழைய தாலுகா அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில், முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்தது.

திருத்தணி காந்தி சாலையில் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ், பழைய கருவூலக அலுவகம், சிறைச்சாலை மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இங்கு, பழைய தாசில்தார் அலுவலகத்தில் மர்மமான முறையில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை எழும்பியதையடுத்து, பொதுமக்கள் விரைந்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து வந்து, 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, கிளை சிறைச்சாலை மற்றும் சார்பதிவாளர் அலுவலகம், தீ விபத்தில் இருந்து தப்பியது.

இந்த தீ விபத்தால் பழைய தாசில்தார் அலுவலகத்தில் முக்கியமான பழைய ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்தது.

Exit mobile version