இத்தாலியில் 280 ஆண்டுகள் பழமையான பள்ளி ஒன்று தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. டூரின் என்ற இடத்தில் 1740 ஆம் ஆண்டு குதிரையேற்றப் பயிற்சிப் பள்ளி ஒன்று கட்டப்பட்டது. தற்போது வரை நல்ல நிலைமையில் இயங்கி வரும் இந்தப் பள்ளிக் கட்டடத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்தப் பள்ளிக் கட்டடத்தில் திடீரெனத் தீப்பிடித்தது. சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுப்படுத்தப்பட்டாலும் பழமையான பள்ளியின் பெரும்பாலான பகுதி தீக்கிரையானது.