கோவை அருகே பஞ்சு குடோனில் தீ விபத்து

கோவை அருகே பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

இருகூரில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் வட மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வந்தனர். இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகள் கொழுந்துவிட்டு எரிய துவங்கின. இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர்.

ஆனால் காற்றின் வேகம் காரணமாக தீ அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனையடுத்து தீ விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

Exit mobile version