டெல்லியில் 4 அடுக்குகள் கொண்ட தொழிற்சாலையில் தீ விபத்து

டெல்லியில் பீராகார்ஹி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. 4 அடுக்குகள் கொண்ட இந்த தொழிற்சாலையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்த தீ, அடுத்த கட்டிடத்திற்கும் பரவியது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு 28 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்களில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக, மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Exit mobile version