ஆம்பூர் அருகே காலனி உதிரி பாகம் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காலனி உதிரிபாகம் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

ஆம்பூர் அருகேயுள்ள பாங்கிஷாப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலனி உதிரி பாகங்கள் சேகரிக்கும் குடோன் உள்ளது.  இங்கு நள்ளிரவில் பற்றி எரிந்த தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது. தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த காலனி தயாரிக்க பயன்படுத்தப்படும் ஷீ லேஸ், காலனி உதிரி பாகங்கள், இரசாயனம் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரித்து நாசமானது. தீ விபத்து குறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version