சரக்கு சேவை வரியால் இந்திய குடும்பங்களின் சேமிப்பு அதிகரிப்பு – நிதி அமைச்சகம்

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வரி அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், நுகர்வோர் செலவு புள்ளி விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது.

இதில், தானியங்கள், சமையல் எண்ணெய் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் இந்திய குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு சரசாரியாக 320 ரூபாய் வரை மிச்சமாவதாகவும் தெரியவந்துள்ளது.

Exit mobile version