நிதி நிறுவன நிர்வாகிகளின் முன்ஜாமீன் ரத்து – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

நிலம் வாங்கி தருவதாக 12 லட்சம் பேரிடம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிதி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த டிஸ் அசர்ட் என்ற தனியார் நிதி நிறுவன நிர்வாகிகள் மீது, ஆயிரத்து 137 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் இருந்து தனியார் நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆவணங்களை தாக்கல் செய்யாமல், பொய் வாக்குமூலம் அளித்ததாக கூறி, மூன்று பேரின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

Exit mobile version