அசாமில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி அசாமில் பத்து நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வந்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்குக் கடந்த 11 ஆம் தேதியில் இருந்து செல்பேசி, இணையத்தளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருவதால் நேற்று முதல் மீண்டும் செல்பேசி, இணையத்தள சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைகள் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சர்வானந்த சோனோவால் தெரிவித்தார். வன்முறைக்குக் காரணமானவர்கள், வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post