ஆரணியில் ஒரே வீட்டில் இருந்து 50 எரிவாயு உருளைகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரே வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர் உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியை அடுத்த மருசூரில் சமையல் எரிவாயு உருளைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய பறக்கும் படையினர் ஆனந்தன் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகளைக் கண்டுபிடித்தனர்.

எரிவாயு உருளைகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வீட்டு உரிமையாளர் ஆனந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version