பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை

காஷ்மீர் மாநிலத்தில் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஆதூரா மற்றும் கேரி பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நிகழ்த்தினர்.

இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு கடும் சண்டை நடந்து வருகிறது.

Exit mobile version