திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு மரத்தேரோட்டம் நடைபெற்றது.
முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. உற்சவ விழாவில் தினம்தோறும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வாகன சேவைகளில் எழுந்தருளி மலைக் கோயில் மாட வீதிகளில் உலாவரும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. 7 ஆம் நாளில் சிறப்பு பெற்ற மரத் தேரோட்டம் நடைபெற்றது.
வள்ளி தெய்வானை சமேதமாக, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மலைக் கோயிலை சுற்றி தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.