சென்னை திரெளபதி அம்மன் திருக்கோயிலில் தேர்பவனி விழா

சென்னை திரெளபதி அம்மன் திருக்கோயிலில் மழை வேண்டி விடிய விடிய நடைபெற்ற தேர் பவனியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

நூற்றாண்டு பழமைவாய்ந்த சென்னை தேனாம்பேட்டை திரெளபதி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் இறுதி நாளான நேற்று மழையின்றி தவித்துவரும் தமிழக மக்களுக்கு மழை பொழிய வேண்டி திரெளபதி அம்மனின் தேர்பவனி விழா நடைபெற்றது. இதற்காக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வணங்கிச் சென்றனர். 

Exit mobile version