பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியை:
சீனாவில் ஜியாஸுவாவில் உள்ள மெங்மெங் ப்ரீ ஸ்கூல் எஜுகேஷன் என்ற கிண்டர்கார்டன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வாங் யுன். இவருக்கும், சக ஆசிரியர் ஒருவருக்கும் இடையே கடும் சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மனதில் வைத்துக்கொண்டு சில பல காரியங்களை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஆசிரியரை பழிவாங்கும் எண்ணத்தோடு பயங்கர சதி செயலைச் செய்து வந்துள்ளார். அந்த செயலை நிறைவேற்றும் விதமாக கிண்டர்கார்டன் பள்ளி மாணவர்கள் வழக்கமாக சாப்பிடும் உணவில் விஷம் கலந்துள்ளார்.
இந்த உணவினை சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாகினர். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் ஆனால் அவர் அந்த உணவில் சோடியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை தூவியிருக்கிறார். உணவை சாப்பிட்ட இருபத்து ஐந்து குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சிகிச்சையில் இருபத்து நான்கு குழந்தைகள் சிகிச்சை முடிந்து எந்த ஒரு உபாதைகளும் இல்லாமல் வீட்டிற்கு திரும்பினர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் பத்து மாதங்கள் ஆனப் பிறகும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசியில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது.
மரண தண்டனை விதித்த சீன அரசு:
இந்த சம்பவம் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. அந்த மாணவர் உயிரிழப்பானது சீன மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து பெண் ஆசிரியர் வாங் யுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான விசாரணை ஜியாஸுவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர் தனது கணவரையும் காஃபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதனைக் கேட்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து வாங் யுன் இதற்கு மரண தண்டனை விதித்தது அந்நாட்டு அரசு.
இதுதொடர்பாக வாங் யுன் தரப்பில் மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து தண்டனைக்கு உரிய நாள் மற்றும் நேரத்தை அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அறிவித்த தேதியில் நேற்று முன்தினம் வாங் யுன்னிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்தது. பொதுவாகவே சீன நாட்டில் மரணதண்டனை என்பது துப்பாக்கியால் சுட்டும் அல்லது விஷ ஊசிப் போட்டும் நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்தமுறை மாறி உள்ளதாக அறிவித்தது. துப்பாக்கி சுடுதலுக்கு பதிலாக விஷ ஊசி போடும் நடைமுறை தான் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன சீன அரசு. மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட வாங் யுன்னிற்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.