இரண்டாம் கட்ட மூலதனமாக பொதுத்துறை வங்கிகளுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாயை இம்மாத இறுதிக்குள் மத்திய நிதி அமைச்சகம் வழங்க உள்ளது.
வாராக்கடன் உள்ளிட்ட பிரச்சனைகளால் பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன. இதனால் வங்கிகளின் அன்றாட பணிகளுக்காக மூலதனம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
கடந்த வருடம் பொதுத்துறை வங்கிகளுக்கு 2 கோடியே 11 லட்சம் ரூபாய் மூலதனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி ஏற்கனவே முதற்கட்டமாக 5 பொதுத்துறை வங்கிகளுக்கு 22 ஆயிரத்து 336 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இரண்டாம் கட்டமாக 54 ஆயிரம் கோடி ரூபாய் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மூலதனத்தை பயன்படுத்தி வங்கிகள் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான கடன்களை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.