டெஸ்ட் போட்டிகளிலிருந்து பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் ஓய்வு

தென் ஆப்பிரிக்கா அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஸ்டெயின் கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமானார். 36 வயதான டேல் ஸ்டெயின் இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 5 முறை 10 விக்கெட்டுகளையும், 26 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ள ஸ்டெயினுக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Exit mobile version