கடையநல்லூரில் மழை பெய்து வருவதால் இரண்டாம் கட்ட மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்…
நெல்லை மாவட்டம் அருணாச்சலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், விவசாயிகள் இரண்டாம் கட்ட மக்காச்சோளம் பயிரிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால், இங்குள்ள கிணறு, குளம் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டு வருவதாகவும், இதனால் விளைச்சல் அதிகரித்து நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு குவிண்டால், 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறினர்.