திருவண்ணாமலை மாவட்டத்தில், கொத்தவரங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் கொத்தரவங்காய் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அண்மையில் பெய்த மழையால் அதிக விளைச்சலைக் கண்டுள்ள கொத்தரவங்காய், இந்த மாதத்தில் அதிகளவு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த செலவில் அதிக லாபம் தரும் கொத்தவரங்காய் 45 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை அறுவடை செய்யப்படும் கொத்தவரங்காய், கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் செலவுகள் போக 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.