அதிக விலைக்கு விற்பனையான வாழைத்தார்கள் – விவசாயிகள் மகிழ்ச்சி

கோபி செட்டிபாளையத்தில் வாழைத்தார்கள் அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்க ஏல விற்பனை மையம் உள்ளது. இங்கு 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 9 ஆயிரம் வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஆரம்ப விலையே தார் ஒன்றின் விலை 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டது. தேன் வாழைதார் ஒன்று 450 ரூபாய் முதல் 510 ரூபாய் வரையும், ரஸ்தாலி 490 ரூபாய் வரையும், பூ வாழை 450 ரூபாய் வரையும் வியாபாரிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டது. 8 ஆயிரத்து 627 வாழைத்தார்கள் 9 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. வாழைத்தார்கள் தாங்கள் எதிர்பார்த்த விலைக்கு போனதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version