தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்பட்டதால் நுரையுடன் தமிழகத்திற்கு ஆற்றுநீர் வருகிறது. கர்நாடக பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் தென்பெண்ணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநில எல்லையில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் கழிவுகள் யாருக்கும் தெரியாமல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இரசாயனம் கலந்த கழிவுகள் ஆற்று நீரில் கலந்து கிருஷ்ணகிரி நீர்தேக்கத்தை வந்தடைகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் நுரையுடன் கழிவு நீர் கலந்து செல்கிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.