ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீட்டிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்த போதிலும் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா – தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வபோது அதிகரித்து வருகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்தானது நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து 65-வது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version