திருவண்ணாமலையில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வளையாம்பட்டில் ஏரியைத் தூர்வாரும் போது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதலமடைந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வளையாம்பட்டு கிராமத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அப்யான் திட்டத்தின் கீழ் ஏரிகளைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏரியின் குறிப்பிட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண் அகற்றியபோது சிதலமடைந்த கல்வெட்டுக்கள் கிடைத்தன.

அந்தக் கல்வெட்டுகளை ஆராய்ந்த போது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பதும் ஏரிக்கு மதகு கூம்பு அமைத்துக் கொடுத்தவரின் நினைவாக வைக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் கிராமத்தின் உண்மையான பெயர் வளையம் அழகியான் பட்டு என்பதும் காலப்போக்கில் மருவி வளையாம்பட்டு என்று அழைக்கப்பட்டதும் கல்வெட்டு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Exit mobile version