ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா, மாரடைப்பு காரணமாக கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந்தேதி கடைசி நாளாகும்.

Exit mobile version