ஈரோடு கிழக்கு.. அதிமுகவின் இலக்கு.. திமுகவை விலக்கு! [பகுதி இரண்டு]

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாம் அவர்கள் மூன்று நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்தார். மேலும் நாளையும் நாளை மறுநாளும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் அவரது வருகையை ஒட்டி ஈரோடு கிழக்கே மக்கள் திரளால் அலைமோதுகிறது. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் வெற்றி ஓரளவு உறுதியாயிருக்கும் நிலையில் திமுகவினர் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்ற கட்டுரையில் அதிமுக ஆட்சியில் ஈரோட்டிற்கு என்னென்ன நலத்திட்டங்கள் கொண்டு வந்தன என்பதை பார்த்தோம். தற்போது திமுகவிற்கு ஏன் மக்கள் ஓட்டுப் போடக்கூடாது என்பதை பார்ப்போம்.

திமுகவிற்கு ஏன் மக்கள் ஓட்டுப்போடக்கூடாது?

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்வதற்காக முதல் கையெழுத்துப் போடப்படும் என்று திமுகவின் பட்டத்து இளவரசர் அறிவித்திருந்தார். நீட்டை ரத்து செய்வதற்கான ரகசியம் தனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார். இன்றுவரை அதற்காக எந்தவித முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. அடுத்ததாக பொதுமக்களை கவரும் விதமாக 520 வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். அவற்றில் 85% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்கிறார். இதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. இந்த 520 வாக்குறுதிகளில் குறைந்தபட்சத்தினைக் கூட திமுக நிறைவேற்றவில்லை. அதிலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவோம் என்று சொல்லி 21 மாத ஆட்சியில் ஒருமுறைகூட 1000 ரூபாயை கண்ணில் காட்டவில்லை. ஆனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை பணம் பட்டுவாடா ஆகியுள்ளது.

கடலில் பேனா வைக்கவெல்லாம் காசு உள்ளது. ஆனால்..?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை அமைக்க வேண்டும் என்று திமுக ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதற்காக 81 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதியாக ஒதுக்கியுள்ளது. கடலில்தான் பேனா சின்னத்தினை வைக்கவேண்டுமா? காரணம் தன் தந்தையின் புகழை உலகமெல்லாம் பரப்ப வேண்டும் என்கிற குடும்ப அரசியல். இதனை அமைக்க மட்டும் காசு உள்ளது. ஆனால் முதியோர்களுக்கான பென்சன் தருவதற்கு போதிய நிதி அரசிடம் இல்லையாம். இது என்ன மாதிரியான மனநிலை என்றுத் தெரியவில்லை. மேற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை வேறு கூட்டிவிட்டது. முன்பெல்லாம் கரண்டைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும். தற்போது கரண்ட் பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது.

அமைச்சர்களின் போர்வையில் ரவுடிகளா?

திமுக அமைச்சர்கள் தங்களின் அமைச்சர் பதவிக்கு ஏற்ப நடந்துகொள்ளாமல் கண்ணியம் இழந்து காணப்படுகிறார்கள். ஒரு அமைச்சர் தொண்டர் தனக்கு நாற்காலி எடுத்து வரவில்லை என்று கல்லைக்கொண்டு அடிக்கிறார். இன்னொரு அமைச்சர் மேடையில் தொண்டரை சப்பென்று அறைகிறார். மற்றொரு அமைச்சர் மனு கொடுக்க வந்த பெண்மனியின் தலையில் அடிக்கிறார். திமுகவின் மூத்த எம்பி ஒருவர் கையை வெட்டுவேன் என்கிறார். இதற்கெல்லாம் மேலே போய் முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின் தமிழக கவர்னரை ஒருமையில் பேசுகிறார். அதிகாரத்தில் இருப்பதால்தானே இதுபோன்ற அராஜகத்தில் திமுக ஈடுபடுகிறது. இந்த இடைத்தேர்தல் திமுகவிற்கு ஒரு பாடமாக அமையும். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதுபோல ஆட்சி மாறும், காட்சி மாறும். ஆம் மாற்றம் ஏற்படும். அதிமுக ஈரோடு கிழக்கில் வெல்லும்.

இக்கட்டுரையில் முதல் பகுதி கீழே உள்ள லிங்கில் உள்ளது. சொடுக்கவும்.

.https://newsj.tv/erode-east-admk-aim-dmk-fail-2/ ‎

Exit mobile version