ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இடைக்கால பொதுச்செயலாளர் சூறாவளி பிரச்சாரம்!

ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 5 நாட்கள், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு வீரப்பாம்பாளையம், பெரியவலசு நால் ரோடு, இடையன்காட்டுவலசு, மணிக்கூண்டு வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில், கழக இடைக்கால பொதுச்செயலாளர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

வரும் 16ஆம் தேதி மாலை, அக்ரஹாரம் அசோகபுரம் பகுதிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம், வண்டிப்பேட்டை, நெரிகல் மேடு, காவேரி ரோடு சின்ன மாரியம்மன் கோயில், வைராபாளையம் பள்ளிக்கூடம், கிருஷ்ணம்பாளையம் ஓங்காளியம்மன் கோயில், ராஜாஜிபுரம் ஆகிய இடங்களில், கழக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக, தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 17ஆம் தேதி கருங்கல்பாளையம் பெரியார் நகர் பகுதிக்கு உட்பட்ட ராஜகோபால் தோட்டம், தேர்முட்டி, மோசிகீரனார் வீதி, வி.வி.சி.ஆர். நகர், சமாதானம்மாள் சத்திரம் ஆகிய இடங்களில், இடைக்கால பொதுச்செயலாளர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 24ஆம் தேதி மாலை, பன்னீர்செல்வம் பார்க் பகுதியிலும், 25ஆம் தேதி வீரப்பன் சத்திரம் பகுதியிலும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் பிரச்சார பேருரை ஆற்ற உள்ளதாக, தலைமைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version