20 சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் நாளை ஆலோசனை

காலியாக உள்ள இருபது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவிர திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார்.

இந்நிலையில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் இடைத்தேர்தலை வெற்றிகரமாக சந்திப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version