சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் கொண்டாடினார். அங்குள்ள பாலமுருகன் கோவிலில் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்திய முதலமைச்சர், கோமாதாவுக்கு பழங்களை வழங்கினார். கோயிலுக்கு வழிபாடு நடத்த வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பொங்கலை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.