பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை உளவு பார்த்த பொறியாளர் – 3 நாள் விசாரணை

பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொறியாளரை உத்திரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு 3 நாள் காவலில் எடுத்துள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய பொறியாளர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு,  மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு  இணைந்து கைது செய்தது. அவருடைய தனிப்பட்ட மடிக்கணினியில் அதிகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும்,அதனை அவர் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என தெரியவந்தது.

இதையடுத்து மராட்டிய மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்த் அகர்வாலை காவலில் அனுப்ப உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தொடர்பாக முழு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.இதனையடுத்து 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  உத்தரபிரதேச பயங்கரவாத பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

 

 

 

 

 

Exit mobile version