ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயலதிகாரியான சாந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை விசாரணை

வீடியோகான் நிறுவனத்துக்கு விதிமுறைகள் மீறி கடன் வழங்கிய விவகாரம் தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயலதிகாரியான சாந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரியாக சாந்தா கோச்சார் பதவி வகித்தபோது வீடியோகான் நிறுவனத்துக்கு ஆயிரத்து 875 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு விதிகள் மீறப்பட்டதாக சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் மீது அமலாக்கத்துறை அந்நிய செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், சாந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version