பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீது மீது, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்காக நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை நிறுவிய ஹபீஸ் சயீது, அவரது கூட்டாளி ஷாகித் மெஹ்மூத், டெல்லியைச் சேர்ந்த ஹவாலா தரகர் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு பணத்தை அனுப்பி, பின்னர் அங்கிருந்து அதே முறையில், பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், ஹபீஸ் சயீது உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.