பழனி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்களுக்கான எண்டாஸ்கோபி இயந்திரம் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனைக்கு பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். பழனி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளுக்கு தகுந்த சிகிச்சை வசதி இல்லாத காரணத்தால் மதுரை மற்றும் இதர தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்லும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், 10 லட்சம் ரூபாய் செலவில் பழனி அரசு மருத்துவமனையில் எண்டாஸ்கோபி இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.