பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழந்து வருவது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் சில நாட்களாக மூளைக் காய்ச்சலுக்கு 155-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மூளைக் காய்ச்சல் பாதிப்புடன் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த பாதிப்பிற்கு காரணம் லிச்சி பழங்கள் என்பது கண்டறியப்பட்டு ஆய்வகங்களில் இந்த பழங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பியுள்ளது
குழந்தைகளின் உயிரிழப்பை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒருவார காலத்திற்குள் பதிலளிக்க பீகார் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.