இணையத்தில் வைரலாகும் ‘ஏன் என்னை பிரிந்தாய்’ பாடல்

துருவ் விக்ரமின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பரிசளிக்கும் விதமாக ‘ஏன் என்னை பிரிந்தாய்’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் 2017ம் ஆண்டு வெளிவந்த வந்த படம் அர்ஜுன் ரெட்டி.இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்தனர்.இயக்குனர் பாலா இயக்கத்தில் ’வர்மா’ என்ற பெயரில் உருவானது.ஆனால் படம் வெளியாகும் நிலையில் படம் திருப்தி அளிக்கவில்லை என தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது.

இதனை தொடர்ந்து மீண்டும் ’ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் கிரிசாயா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இவருக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை பனிடா சந்து நடித்துள்ளார்.சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இன்று துருவ் விக்ரம் தனது 24 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவருக்கு பரிசளிக்கும் விதமாக ‘ஏன் என்னை பிரிந்தாய்’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘ஏன் என்னை பிரிந்தாய்’ ஹேஸ்டேக் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version