யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நடைபெற்று வந்த யானைகளுக்கான நல்வாழ்வு புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 48 நாட்களாக நடைபெற்ற இந்த புத்துணர்வு முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் இருந்து 28 யானைகள் பங்கேற்றன. இங்கு அவைகளுக்கு நடைப்பயிற்சி, மருத்துவப் பரிசோதனை, சத்தான உணவுகள் ஆகியவை வழங்கப்பட்டது.

இதேபோல், கூந்தப்பனை, சோளத்தட்டு, மசால்புல், தென்னை பனை ஓலைகள், கரும்பு உள்ளிட்ட பசுந்தீவனங்கள் யானைகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கிய யானைகள் முகாம் இன்று முடிவுறுகிறது. இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் யானைகள் சம்பந்தபட்ட கோவில்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. மேலும் இப்பணிகளை சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கோண்டு வருகின்றனர்.

Exit mobile version