புதிய காலிப்பணியிட பட்டியலை நிரப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளுக்கு, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் இருந்து பணிமாறுதல் வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் இடங்கள், வரும் கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் உபரி ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து, பணி மாறுதல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, புதிய காலிப்பணியிட பட்டியலை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் விரைந்து இ.எம்.ஐ.எஸ் இணையதளத்தில் பூர்த்தி செய்து மாறுதல் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.