திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலைமை காவலர் உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் புதுவாயல் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில், கோவிந்தசாமி என்ற தலைமை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், காவலர் கமலநாதன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.