கோபிசெட்டிபாளையத்தில், தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் கோபிசெட்டிபாளையம் பகுதியில், தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு வேட்பாளர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடும் கூட்டங்கள், பிரச்சாரங்களுக்கு செலவிடும் கணக்கு விவரங்களை செலவின கணக்கு பராமரிப்பு குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றது. அதனடிப்படையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு பராமரிப்பு கணக்கு விவரங்கள் குறித்து, தேர்தல் செலவின பார்வையாளர் சிட்னி சில்வாஸ் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து வாக்குசாவடிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

Exit mobile version