மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு

மகா புயல் குஜராத் கடற்கரையை நோக்கி செல்வதால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 6 மற்றும் 7ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ராஜ்கோட், போர்பந்தர், அகமதாபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை மகா புயலால் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மகா புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதால், வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில், மழையின் தாக்கம் குறைந்து காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக பேரிடர் குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version