காகிதமில்லாத சட்டசபையை உருவாக்க, அதன் செயலக ஊழியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் நடவடிக்கைகளை காகிதம் இல்லாத வகையில் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தேசிய ‘இ-விதான்’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையிலும் செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் பேரவை மின் ஆளுமை திட்டத்தைச் செயல்படுத்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் உள்ள இதர அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான மின்னணு பயிற்சியை பேரவைத் தலைவர் தனபால் தொடக்கி வைத்தார்.