வேட்பாளரின் பெயரை மாற்றிக் கூறிய டிடிவி தினகரன்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை டிடிவி தினகரன் மாற்றிக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.அமமுகவின் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பழனியில் பிரச்சாரகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தனது கட்சி வேட்பாளர் ஜோதிமுருகனின் பெயரை வேல்முருகன் என்று மாற்றிக் கூறினார். இதனால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர். வேட்பாளரின் பெயரைக் கூட டிடிவி தினகரனால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லையே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Exit mobile version