திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாடு – அதிகாரிகள் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை குறைந்ததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து, கோடை துவக்கத்திற்கு முன்பே திருத்தணி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், அரக்கோணம் திருத்தணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தினம் தோறும் 15 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக தீர்க்கும் வகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திருப்பார்க்கடல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் கூறியுள்ளார்.

Exit mobile version