கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை நீர்தேக்க திட்டப் பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும்

சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நீர்தேக்க திட்டப் பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும் என பொதுபணித்துறை தெரிவித்துள்ளது.

பூண்டி, புழல், சோழவரம், மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான ஏரிகளாக உள்ளது. இருப்பினும் போதிய மழை இல்லாத காரணத்தால், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை நீர் தேக்கும் திட்ட பணிகள் தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய பகுதியில் உள்ள இரண்டு பெரும் குளங்கள் இணைக்கப்பட்டு பிரம்மாண்ட நீர் தேக்கம் உருவாக்கப்படுகிறது. இதற்கான பணிகள் 380 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version