அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சி சார்ந்தும், பொறுப்பாளர்கள் சார்ந்தும் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் பொதுக்குழுவின் தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவினைப் பிறப்பித்தது. இதனை எதிர்த்து மீண்டும் பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்கிற வழக்கினைத் தொடுத்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவின் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக தரப்பிடம் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கினை மார்ச் 17 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.YouTube video player

Exit mobile version