மும்பை தாக்குதல் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க அமெரிக்கா இந்திய மக்களுக்கு துணை நிற்கும் – டொனால்ட் டிரம்ப்

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க இந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் நடைபெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை நினைவு கூர்ந்து, டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் மும்பை தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய மக்களுக்கும் உரிய நீதி கிடைக்க அமெரிக்கா இந்திய மக்களுக்குத் துணை நிற்கும் எனவும் கூறியுள்ளார். இதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதத்தை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம் என்றும் டிரம்ப் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Exit mobile version