மேக் இன் இந்தியா திட்டத்திற்குப் பிறகு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார சங்கத்தின் 101ஆவது தேசிய மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கட்டிடங்களை கட்டுவதற்கு அதிகளவு நிலத்தை பயன்படுத்துவதை தவிர்த்து உயரமான கட்டிடங்களை கட்ட முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் தொழில் வளர்ச்சி மற்றும் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதியும் உயர்ந்து இருப்பதாக தெரிவித்தார். 

Exit mobile version