மத்திய அமைச்சர் மேனகா காந்தி அளித்த தகவலின் பேரில் நடவடிக்கை – 11 உயர்ரக நாய்கள், 40 வெளிநாட்டு பறவைகள் மீட்பு

மத்திய அமைச்சர் மேனகா காந்தி அளித்த தகவலின் பேரில், சென்னை அருகே, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ரக நாய்கள், வெளிநாட்டு பறவைகளை புளுகிராஸ் அதிகாரிகள் மீட்டனர்.

சென்னை, கிஷ்கிந்தா சாலையில் உள்ள ஒரு வீட்டில், பாண்டியன் என்பவர், நாய்கள், வெளிநாட்டு பறவைகளை அடைத்து வைத்து, உணவு, தண்ணீர் கொடுக்காமல் வளர்ப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியானது. இதனை அறிந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, புளுகிராஸ் அமைப்பினருக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதையடுத்து புளுகிராஸ் அமைப்பை சேர்ந்தவர்கள், பாண்டியனின் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது மோசமான நிலையில் இருந்த பதினோரு உயர்ரக நாய்கள் மற்றும் நாற்பது வெளிநாட்டு பறவைகளை உயிருடன் மீட்டனர். இறந்த நிலையில் ஒரு நாய் மற்றும் பறவையை கைப்பற்றினர். விலங்கினங்களை உணவின்றி வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்தியதாக, பாண்டியன் மீது சோமமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நாய்களை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த, வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட பறவைகளை வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்க உள்ளதாக புளுகிராஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version