ஆதார் எண்ணை வெளிப்படையாக பதிவிட வேண்டாம்

இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, தனது ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ஹேக்கர்களுக்கு சவால் விடுத்திருந்தார். இதையடுத்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரால், ஆர்.எஸ்.ஷர்மாவின் தொலைபேசி எண், வாட்ஸ்ஆப் முகப்பு புகைப்படம், பான் அட்டை எண், வீட்டு முகவரி என்று பல்வேறு தகவல்களை வலைதளத்தில் வெளியிட்டப்பட்டது. மேலும், ஷர்மாவின் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் டெபாசிட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பட்டநிலையில், இது தொடர்பான அறிவிப்பை ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களில் ஆதார் எண்களை பொதுமக்கள் வெளியிட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும்,  அரசின் சேவைகளை பெறுவதற்காக மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. மற்றவர்களின் ஆதார் எண்ணை தங்களது அடையாளத்துக்காக பயன்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version