சி.பி.எஸ்.இ. கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. வகுத்த பாட புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 1ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கூட, வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். மேலும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தும், என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தையும், பாட புத்தகத்தையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது, நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநில சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த உத்தரவை செயல்படுத்த சிபிஎஸ்சி பள்ளிகள் தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கோரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த சிபிஎஸ்சிக்கு போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிகல்வித் துறை செயலாளர்களையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தார்.
2ஆம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்க கூடாது -உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: 2ஆம் வகுப்புஉயர்நீதிமன்றம் எச்சரிக்கைவீட்டு பாடம்
Related Content
வெளியே வராதீர்கள் - பொதுமக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேண்டுகோள்!
By
Web Team
November 24, 2020