மெல்ல மெல்ல கொள்கிறதா மைதா உணவு?

சாலையோரங்களை ஆக்கிரமிப்பதில் பிரியாணி கடைகளுக்கு முன்னோடி பரோட்டா கடைகள்தான். தென் மாவட்டங்களில் பரோட்டா அத்தியாவசிய உணவு என்றும் சொல்லும் அளவுக்கு வீச்சு பரோட்டோ, பொரிச்ச பரோட்டோ, கொத்து பரோட்டோ, சில்லி பரோட்டா என்று விதவிதமாக உண்ணப்படுகிறது. தமிழகம் முழுவதுமே மக்களின் விருப்ப உணவாகியுள்ள வெள்ளை நிற மைதாவில் உருவாகும் இந்த பரோட்டோ நமது வாழ்வை அழித்துக் கொள்ள நாமே தேர்ந்தெடுக்கும் உணவு என்று பொட்டிலடித்தாற்போல் இன்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சென்னையில் கடந்த நான்கு மாதத்தில் 9 பேர் பரோட்டா சாப்பிட்டு
ஏற்பட்ட பாதிப்பால் மாரடைப்பு, வயிற்றுப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு
பிரச்சனைகளில் சிக்கி தங்களது உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் இரவு நேரத்தில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு குளிர் பானம் குடித்ததால் உடல்நலம் பாதித்து மாரடைப்பில் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. கோதுமையில் இருந்து சத்துக்கள் நீக்கப்பட்டு மைதா மாவு தயாரிக்கப்படுவதாகவும், பரோட்டா மிருதுவாக இருப்பதற்காக மைதா மாவில் ரசாயனம் சேர்க்கப்படுவதாகவும், அதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இரவுகளில் பரோட்டா சாப்பிடும் போது செரிமான சக்தி முழுமையாக பாதிக்கப்படுகிறது. கணையம் உள்ளிட்ட உடலின் பல்வேறு உடல் பாகங்கள் முழுவதுமாக பாதிக்கப்படுகின்றன. மேலும் வயிற்று செரிமான பிரச்சனை ஏற்படுவதுடன் மாரடைப்பும் நிகழ்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிறது தமிழ் முதுமொழி. பிடித்த உணவானாலும் அது உடலுக்கு நஞ்சாகும் எனும்போது அதனை தவிர்ப்பதே ஆயுள் காக்கும் வழியாகும். மைதாவினால் தயாரிக்கப்படும் பரோட்டாவின் கெடுதல்களை அறிந்து மக்களே அதை தவிர்த்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

Exit mobile version