மதுரையில், 5 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு புகாரில், திமுக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை எஸ்.ஆர்.வி. சுரேந்திரன் நகர் பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி என்பவருக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் அதலை செந்தில் அபகரிக்க முயன்றுள்ளார். நிலத்தை அபகரிப்பதற்காக போலியான ஆதார் அட்டைகள் உட்பட பல ஆவணங்களை அவர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், நிலத்தை அபகரிக்க முயன்ற அதலை செந்தில் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் செந்திலை கைது செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு சொத்து அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவினரின் தொடரும் அடாவடி செயல்கள் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.